fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பெரும் வெற்றியை எதிர்பார்த்து சூர்யா சிறப்பு பிரார்த்தனை

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தைத் தொடர்ந்து ‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கும் நிலையில், இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யா 38 திரைப்படம் தொடங்குவதையொட்டி அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

     நடிகர் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் முடித்திருக்கும் படம், ‘என்.ஜி.கே’. இந்தப் படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டீசர் வெளியானது. மேலும், ‘உறியடி 2’ படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் ‘இறுதிச்சுற்று’ சுதா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்றும் மேலும் இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

பெரும் வெற்றியை எதிர்பார்த்து சூர்யா சிறப்பு பிரார்த்தனை

     இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கும் நிலையில், இயக்குநர் சுதாவுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றிருக்கிறார் சூர்யா. தன்னுடைய நண்பரும் 2டி நிறுவன நிர்வாகியுமான ராஜசேகரன் கற்பூரபாண்டியனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பிரார்த்தனையின் போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Related posts

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான பரிசு !

TamilTwin India

விஜய் தொலைக்காட்சிக்கு முன்னுரிமை கொடுத்த கமல் ஹாசன்!!!

N N

புடவையிலும் குறையாத கவர்ச்சியை வைரலாகும் ஷாலு ஷம்மு..!

TamilTwin India