fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ராணுவ அதிகாரியாக நடிக்கும் சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் என். கே. ஜி திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது.  இப்ப்டத்தினை அடுத்து இவர் காப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து நடிகர் சூர்யா இறுதிச் சுற்று பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.  தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா ராணுவ வீரராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராணுவ அதிகாரியாக நடிக்கும் சூர்யா

இப்படத்தினை நடிகர் சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கிறது.  இத்திரைப்படமானது பிரபல தொழில் அதிபர் மற்றும் ராணுவ வீரரான ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றினைக் குறித்து படமாக எடுக்கப்பட உள்ளது.  சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தின் படப்பிடிப்பானது வருகிற ஏப்ரல் மாத தொடக்கதில் இருந்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படம் நடிகர் சூர்யாவின் 38 – வது திரைப்படம் ஆகும்.  இப்படத்திற்கு ஜி. வி . பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.

Related posts

”மறைந்த இளம் நடிகரின் கடைசி ஆசை”, கண்ணீர் விட்ட நண்பர்!

TamilTwin India

புதிய படத்துக்காக 8 மணி நேரம் பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

N N

தளபதியின் வெறித்தனம் பாடல் படைத்த புதிய சாதனை, கொண்டாடும் விஜய் ரசிகர்கள்..!

TamilTwin India