fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » ராஜபக்ச குடும்ப ஆட்சி இன்னும் பலமாக உள்ளது!
இலங்கைச் செய்திகள் செய்திகள்

ராஜபக்ச குடும்ப ஆட்சி இன்னும் பலமாக உள்ளது!

ராஜபக்ச குடும்ப ஆட்சி இன்னும் பலமாக உள்ளது என்ற செய்தியே அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கைப் பிரேரணை தோற்கடிப்பு மூலம் வெளிகாட்டப்பட்டுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று(21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த அவநம்பிக்கைப் பிரேரணை அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்க வேண்டுமா? அல்லது அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்க வேண்டுமா? என்ற வாத பிரதிவாதங்கள் எதிர்க்கட்சித் தரப்பிடமே இருக்கின்றது.

இந்த அவநம்பிக்கைப் பிரேரணையை முன்வைத்த ஐக்கியமக்கள் சக்தி எதிர்க்கட்சித் தரப்பினரிடம் உரிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

Related posts

இலண்டனில் முன்னாள் போராளி மரணம்

SL News

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

SL News

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொக்குவிலில் 17 ஆவது தடவையாக இளைஞர்கள் இரத்ததானம் (Video, Photos)

N N