fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நடிகர் விஜய் படத்தை தயாரிக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் சிவாவின் வெற்றிக் கூட்டணியில் இணைகிறது சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தகவல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது அட்லியின் இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும், அந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது, பெயரிடப்படாத இப்படத்தினை விஜய் 63 என்றே வழங்கி வருகின்றனர்.

நடிகர் விஜய் படத்தை தயாரிக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்

இப்படத்திற்கு அண்மையில் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. இந்த வெற்றிக்கூட்டணிக்கு மேலும் ஆர்வம் அதிகமாகி வரும் இச்சூழலில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியான வண்ணமே இருந்தன.

அதாவது விஜய் 64 படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா என்ற தகவல் வெளியானது, இது தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் விஜய் 64 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சூப்பட் ஹிட் பிலிம்ஸ் நடிகர் விஜய்யின் சில வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் 64 படத்தின் கதையை மெருகேற்றி வரும் சிவா, படப்பிடிப்பை ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்கும் என்றார். 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாவும் கூறியுள்ளார்.

Related posts

கீர்த்தி சுரேஷின் “மிஸ் இந்தியா” படத்தின் முதல் சிங்கிள் இதோ..!

TamilTwin India

கந்த சஷ்டி பாடல் இழிவு, கொதித்தெழுந்த தமிழ் நடிகர் நடிகைகள்…!

TamilTwin India

வாய்ப்பு தேடி அலையும் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதா

TamilTwin India