fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சூப்பர் டீலக்ஸ் நடிகை

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ள நாயகி மிருணாளினி. அப்படத்தில் நான் நடித்துள்ள பகுதி பிடிக்கவில்லை மன்னித்து விடுங்கள் என்று அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

      ஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் அறிமுக நாயகி மிருணாளினி நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் டப்ஸ்மாஷ் எனப்படும் செயலி மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக இருக்கிறார். தற்போது நாயகியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சூப்பர் டீலக்ஸ் நடிகை

     இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள பகுதி பிடிக்கவில்லை என்றால் மன்னித்து விடுங்கள் என்று மிருணாளினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனது சிறிய பங்களிப்புக்காக நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறேன். நன்றி மக்களே. இன்று நான் திரையில் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். உங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். படத்தில் நான் வந்த பகுதி பிடிக்காதவர்களுக்கு மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார். 

Related posts

” வாழ்த்து சொல்லி பாராட்டு” உற்சாகத்தில் அட்லீ..!

TamilTwin India

பாலிவுட் செல்லும் பிரபல நடிகை கோமல் சர்மா !

TamilTwin India

வெளியானது கமலி ப்ரேம் நடுக்காவேரி படத்தின் டீசர் !

TamilTwin India