Thursday, December 1, 2022
HomeUncategorised10, 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுண்டல்.. உற்சாகத்தில் மாணவர்கள்!

10, 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுண்டல்.. உற்சாகத்தில் மாணவர்கள்!

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளிகளில் சுண்டல், பயறுகள் ஸ்நாக்ஸாக வழங்கப்பட்டு வருகின்றது.

அதாவது 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வானது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

மாணவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வுக்கு தற்போது தயாராகி வருகின்றனர்.

அரையாண்டுத் தேர்வுக்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆசிரியர்கள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும் அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் நிலையில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் தினசரி ஒரு மணி நேரம் என்ற அளவில் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த மாலை நேர வகுப்பில் 20,000 க்கும் அதிகமான மாணவர்கள் இந்த பொதுத்தேர்வுக்கான மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாலை நேர வேளையில் கருப்பு சுண்டல், வெள்ளை நிற சுண்டல், பச்சை பயிறு போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த உணவுப் பொருட்கள் இந்திய ஆயில் நிறுவனம் தரப்பில் வழங்கப்பட்டு வருகின்றது.

RELATED ARTICLES

Most Popular