fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

சம்மர் ஸ்பெஷல் கேழ்வரகு கூழ்

கேழ்வரகு ஒரு முழு தானியம் மட்டுமின்றி முழுமையான தானியமும் ஆகும். இது மிக நுண்ணியதாய் இருக்கும். கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச் சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் கேழ்வரகு முக்கிய உணவாக விளங்குகிறது.

இரத்தச்சோகை உள்ளவர்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கும் இது ஒரு  அற்புதமான மருந்து ஆகும். பாலூட்டும் தாய்மார்கள்  குடித்து வந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். மோருடன் கூழைக் கலந்து குடிக்கும்போது உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவைத் தரும். சத்தான கேழ்வரகு கூழ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

கேழ்வரகு கூழ் – Ragi pulp

சம்மர் ஸ்பெஷல் கேழ்வரகு கூழ்

கேழ்வரகு கூழ் - Ragi pulp

சம்மர் ஸ்பெஷல் கேழ்வரகு கூழ் சம்மர் ஸ்பெஷல் கேழ்வரகு கூழ் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • கேழ்வரகு மாவு - 4 கப்
  • அரிசி நொய் - 2 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு

Instructions

கேழ்வரகு மாவை முதல் நாள் இரவே கரைத்து  வைத்துக் கொள்ளவும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அரிசி நொய்யைக் கழுவிப் போடவும். நன்றாக வெந்ததும் கரைத்து வைத்துள்ள மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறி, வெந்ததும் இறக்கவும். காய்ச்சிய கூழுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்து  வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து குடித்தால் கூழ் தயார்.

Related posts

சத்துக்கள் கொண்ட காய்கறி சூப்!!

N N

தினை கோதுமை ரவா தோசை

N N

சுவையான வேர்க்கடலை சாட்

N N