fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

கோடைக்காலத்தில் பெண்கள் அணிவதற்கு ஏற்ற உடைகள்

                கோடைகாலம் தொடங்கி விட்ட நிலையில் எங்கு திரும்பினாலும் வெயிலின் தாக்கம் அதிக அளவிலேயே இருக்கிறது.  இந்த வெயிலுக்கு பெண்களுக்கு ஏற்ற ஆடை வகைகள் எவை என்பதை நாம் இங்கு காணலாம்.

ஹாட் பேன்ட்:

      கோடை காலத்தில் பெண்கள் அணிவதற்கு இவ்வகையான ஹாட் பேன்ட்கள் மிகவும் வசதியாக இருக்கும்.  இவ்வகை பேன்ட்களுக்கு பொருத்தமான சட்டை வகைகளை பெண்கள் வெயில் காலத்தில் அணிந்து கொள்ளலாம்.

பருத்தி சேலைகள்:

      கோடை வெயிலுக்கு மிக மிக பொருத்தமான ஆடைகளில் பருத்தி ஆடைகளும் ஒன்று.  பருத்தி சேலைகளை பெண்கள் கோடை வெயிலுக்கு அணிவதன் மூலம் அவர்கள் இதமான உணர்வினை உணர முடியும்.

நீளமான பாவாடைகள்:

      தட்ப வெப்பமான இடங்களுக்கு எப்பொழுதுமே நீளமான பாவாடைகள் ஏற்றதாக இருக்கும்.  இவை கால்கள் முழுவதையும் மூடி இருப்பதுடன் காற்றோட்டமாகவும் இருக்கும்.

கோடைக்காலத்தில் பெண்கள் அணிவதற்கு ஏற்ற உடைகள்

லூசான பேன்ட்:

      இப்பொழுது எல்லாம் லூசான பேன்ட் பரவலாக காணப்படுகிறது.  இவற்றிற்கு மேட்சாக சட்டைகளை வாங்கி அணிந்து கொள்ளலாம்.

குட்டையான ஆடைகள்:

      கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிந்து கொள்வதற்கு வசதியான ஆடைகளில் குட்டையான ஆடைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.  இவ்வகை ஆடைகள் வெயில் நேரங்களுக்கு தோதாக இருக்கும்.

காதி ஆடைகள்:

      முரடான பருத்தியினை கையால் நெய்து விரும்பிய வடிவில் ஆடைகளாக மாற்றி அணிந்து கொள்ளலாம்.  சேலை, பாவாடைகள், குர்தா போன்றவற்றை காதி ஆடைகளின் மூலம் கூட பெற்று கொள்ளலாம்.

Related posts

பெண்களுக்கு பயன்தரும் இயற்கை அழகு குறிப்புகள்!!

N N

முக அழகினைக் கூட்டும் பாதாம் பருப்பு ஃபேஸ் மாஸ்க்!!

N N

முகத்தை பொலிவாக்கும் சந்தன பேஸ் பேக்

N N