fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்திய சுமந்திரன்

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பண்டிதரை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார். இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பில் வௌ்ளத்தில் சிக்கியவர்கள் இராணுத்தினரால் மீட்பு!

World News

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நித்தியானந்தா

World News

தென்மேற்கு பருவமழைக்கு 1,900 பேர் உயிரிழப்பு! 1 லட்சம் வீடுகள் சேதம்

World News