fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் திடீர் கன மழை (VIDEO, PHOTOS)

யாழில் நீண்ட நாட்களின் பின்னர் திடீர் கடும் மழை பெய்துள்ளது.

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பகல்-12.15 மணியளவில் கடும் மழை வீழ்ச்சி ஆரம்பித்து இடி மின்னலுடன் பெய்துள்ளது.

திடீர் மழை காரணமாக குடை இல்லாமல் வெளியே சென்ற மக்கள் பல இடங்களிலும் செய்வதறியாது தவிப்பதை அவதானிக்க முடிந்தது.

குடாநாட்டில் கடந்த பல நாட்களாகத் தொடர்ச்சியாக கடும் வெயில் வாட்டி வந்தமையால் கால்நடைகள் பாதிப்புக்களை எதிர்கொண்டதுடன் விவசாயச் செய்கையும் பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் நீண்டநாட்களின் பின்னர் கனமழை பெய்தமையால் யாழில் பல இடங்களிலும் வெப்பம் சற்றுத் தணிவடைந்துள்ளது.

(செய்தித்தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்- செ.ரவிசாந்)

Related posts

வடமாகாண கல்வி அமைச்சு மீது குற்றம் சுமத்தியுள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

World News

சர்வதேச ஊடகங்களில் வைரலான ஆபிரிக்கர்!!

World News

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு

World News