fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம்!!
சினிமா

சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம்!!

நடிகை ஆத்மியா ராஜன் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் அறிமுகமானது என்னவோ வெல்லத் தூவல் என்னும் மலையாளப் படத்தில்தான்.  

அதன்பின்னர் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மனம் கொத்தி பறவை படம் மூலம் அறிமுகமானார்.

மனம் கொத்தி பறவை படத்தில் அப்பாவித்தனமான முகமாக குடும்பக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம்!!

அதனைத் தொடர்ந்து போங்கடி நீங்களும் உங்க காதலும், வெள்ளை யானை, காவியன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் அவியல் என்னும் படத்தில் நடித்துவரும் ஆத்மியாவுக்கு ஜனவரி 25 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆத்மியா கேரள மாநிலத்தில் கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்கிறார்.

ஆத்மியாவின் திடீர் திருமண அறிவிப்பால் ரசிகர்கள் சோகமாகிப் போக ஆத்மியா கூறுகையில், “திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

கார்த்தியின் 42ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல்

N N

மாஸ்டர் படத்தில் லீக்கான வில்லன் பவானியின் லுக், வைரலாகும் போட்டோ!

TamilTwin India

நடிகராகும் விக்ரம் தம்பி அரவிந்த்

N N