fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » கோவிட் தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

கோவிட் தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்

இன்று(01) ஆரம்பமாகியுள்ள 2020க்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது திருப்திகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பரீட்சை நிலையங்களில் 38 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 10 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றுகின்றனர். இவர்களில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். நாடு பூராகவும் 4,513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளின் நலன் கருதி சகல மாவட்டங்களிலும் குறைந்த பட்சம் இரண்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

TamilTwin

சிறப்பிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற யாழ். இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் முத்தேர்பவனி (Video)

TamilTwin

சுகாதார அமைச்சின் கோரிக்கை!

SL News