யாழ்.மல்லாகம் மகா வித்தியாலயத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்ற முதல் அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(06.12.2022) முற்பகல்-11.30 மணியளவில் மாணவர் பாராளுமன்றத்தின் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி.வாசுகி சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி அமர்வில் வலிகாமம் வலய சமூக விஞ்ஞானப் பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் செ.பாஸ்கரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாணவர் பாராளுமன்ற அமைச்சர்களால் பல்வேறு பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் பிரேரணைகள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மாணவர் பாராளுமன்ற சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அமர்வில் கலந்து கொண்டதுடன் பார்வையாளர்களாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)