
கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் என்ற வேதிப்பொருள் தான் இதற்கு முக்கியக் காரணம் ஆகும். இது தலை முடியின் வேர் பகுதியினை வலுப்படுத்தி கூந்தல் உதிர்வைக் குறைத்து முடி வளர்ச்சியினை தூண்டுகிறது.
சின்ன வெங்காயச் சாறினை நாம் தலையில் 5 முதல் 10 நிமிடம் வரை மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டத்தினை அதிகப்படுத்தி கூந்தல் உதிர்வை குறைக்கலாம்.
முடி வளர வேண்டும் என ஆசைப்பட்டு கடைகளில் விற்கும் கண்ட எண்ணெய்களையும் வாங்கி உபயோகப்படுத்தாமல், இயற்கை பொருளான சின்ன வெங்காயச் சாறினை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
வெங்காயச் சாறினை கொதிக்கும் தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்துக் காய்ச்சி, சூடு ஆறிய பின் அதனைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் தலை முடி உதிர்வது குறைந்து நன்றாக வளரும்.
தேனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலைமுடிக்கு தடவி வருவதன் மூலமும் முடி உதிர்வை குறைக்கலாம்.