பொள்ளாச்சி பலாத்கார வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அந்த பெண்ணின் பெயர், கல்லூரி விவரங்களை சி.பி.ஐ. விசாரணைக்கான அரசாணையை அதிமுக அரசு வெளியிட்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாலியல் கொடூர சம்பவம் குறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூர சம்பவங்களைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் மற்றும் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வந்தது. இப்போது புதுத்திருப்பமாக திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு (FIR) பதியப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டது அதிமுகவா இல்லை திமுகவா என்பது பற்றி இன்னும் மர்மங்கள் நீடித்தவண்ணம் உள்ளது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.