Tuesday, December 7, 2021
Homeஆன்மிகம்சந்நிதியானுக்கு ஆவணி-08 இல் கொடியேற்றம்!

சந்நிதியானுக்கு ஆவணி-08 இல் கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.வடமராட்சி ஸ்ரீசெல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும்-08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு-08 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ச்சியாகப் பதினைந்து தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் பத்தாம் திருவிழாவான எதிர்வரும்-17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-09 மணியளவில் பூங்காவனத் திருவிழாவும், 18 ஆம் திகதி புதன்கிழமை காலை-07 மணியளவில் கைலாச வாகனத் திருவிழாவும், எதிர்வரும்-20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல்-06 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை-07 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-06 மணியளவில் மெளனத் திருவிழாவும் இடம்பெறும்.

இதேவேளை, மஹோற்சவ காலங்களில் காலைத் திருவிழா தினமும் காலை-07 மணிக்கும், இரவுத் திருவிழா மாலை-05 மணிக்கும் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(செய்தித்தொகுப்பு- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments