தென்னிந்திய நடிகரான ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவிற்கு ரோஜாக் கூட்டம் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர். சிலஆண்டுகள் எந்த படத்திலும் இணையாமல் இருந்தார். தற்சமயம் நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ராக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ராக்கி படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராக்கி என்ற நாய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது. மேலும் ஈஷான்யா மகேஸ்வரி, நாசர், பிரம்மானந்தம், சாயாஜி ஷிண்டே, ஓ.ஏ.கே சுந்தர், கராத்தே ராஜா மற்றும் ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கே.சி.பொகடியா இயக்கியுள்ளார்

இப்படத்தில் எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்த் கொலை செய்யப்படுகிறார். ராக்கி என்ற நாய் ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் நேற்று முனதினம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. புதிய போஸ்டர் ஒன்றை சமூக வலைத்தளங்களில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு நாய் பழிவாங்கும் இந்த திரில் படத்திற்கு டீசர் ரிலீசுக்கு பின் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விவேக் வெளியிட்டார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.