இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாம் படம் சீனாவில் ரிலீஸாகவுள்ளது.
மறைந்த ஸ்ரீதேவி கடைசியாக நடித்த படம் ‘மாம். இந்தப் படம் அவரின் 300வது படமாகும். இந்தப் படத்தை ரவி உத்யாவார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார். இந்தப் படம் தமிழில் அம்மா என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. மாம் படம், 2017- ஜூலை 7-ல் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீதேவி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், பயாலஜி டீச்சராகவும் நடித்திருந்தார். இந்தப் படத்தில், நவாஸுதீன் சித்திக் துப்பறியும் அதிகாரியாக நடித்தார்.

இந்தப் படத்திற்காக நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 300 படங்களில் நடித்த ஸ்ரீதேவிக்கு கிடைத்த முதல் தேசிய விருது இது. ஆனால், அந்த விருதை வாங்க அவர் உயிருடன் இல்லை என்பது சோகம். இந்தப் படம் ஜீ ஸ்டூடியோஸ் இந்தியா மட்டுமின்றி, போலந்து, செக் குடியரசு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 39 நாடுகளில் வெளியிட்டது. ஆனால் அப்போது சீனாவில் மட்டும் அப்போது ரிலீஸாகவில்லை . அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 10 ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..