அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்கள் நியூயோர்க் நகரில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் நியூயார்க் நகரில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுகின்றார்.

இந்த நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறியுமாறும், அரசியல் எதிரிகளை அடக்குவதை உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டகார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.