fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் உலகச் செய்திகள் செய்திகள் புலம்

நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய இலங்கைப் பெண்

முதன்முறையாக நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு இலங்கைப் பெண்ணான வனுஷி வால்டர்ஸ் (Vanushi Walters) தெரிவாகியுள்ளார். நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபர் இவர் என்ற பெருமையை அவர் பெறுகின்றார்.

வனுஷி வால்டர்ஸ் தமது 5 வயதில் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார், இவர் ஒரு மனித உரிமை வழக்கறிஞராகவும், மனித உரிமைகள் ஆணையகத்தின் மூத்த மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். நியூசிலாந்தின், வடமேற்கு ஆக்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலும் வனுஷி வால்டர்ஸுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், ஹாமில்டனுக்கான கிரிக்கெட் வீரருமான தேசிய வேட்பாளர் ஜேக் பெசன்ட் என்பரை எதிர்த்து போட்டியிட்டு வனுஷி வால்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். இதில் பெசாண்டின் 12,727 வாக்குகளையும், வனுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளைப் பெற்றுள்ளனர்..

இதேவேளை நேற்று நடைபெற்று முடிந்த நியூசிலாந்து பாராளுமன்றத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளதுடன் நியூசிலாந்து பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்தடுத்து 3-வது சம்பவம்: திருச்சி பெல் வங்கியில் கொள்ளை: அதிர்ச்சியில் தமிழகம்!

World News

வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

World News

சீனாவில் 18 மாதங்களில் 50 இலட்சம் குழந்தைகள் பிறப்பு!!

TamilTwin