fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » காரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்!!
இந்திய உணவுகள்

காரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்!!

நாட்டுக் கோழியில் பொதுவாக குழம்பு அல்லது ரசம்தான் அதிக அளவில் செய்வோம். இன்று நாம் நாட்டுக்கோழியில் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

காரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்!!- Spicy Country Chicken Pepper Curry !!

காரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்!! காரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல்!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • நாட்டுக் கோழிக் கறி – ½ கிலோ
  • மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • வெங்காயம் - 3
  • தக்காளி - 3
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி- சிறிதளவு
  • மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
  • மிளகுத் தூள் - 2 ஸ்பூன்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • சோம்பு - 1/4 ஸ்பூன்
  • பட்டை - 2
  • எண்ணெய் – தேவையான அளவு

Instructions

  1. நாட்டுக் கோழியை சுத்தம் செய்து கொள்ளவும். நாட்டுக் கோழியுடன் மஞ்சள் தூள், உப்பு, சிறு துண்டு இஞ்சி சேர்த்து வேகவிடவும்.
  2. அடுத்து வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
  3. அதன்பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு, பட்டை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
  4. அதன்பின்னர் நாட்டுக் கோழி, மிளகாய்த் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.
  5. அதன்பின்னர் கொத்தமல்லி இழை தூவி இறக்கினால் காரசாரமான நாட்டுக் கோழி மிளகு வறுவல் ரெடி.

 

 

 

Related posts

சுவையான கொத்தமல்லி சாதம் செய்யலாம் வாங்க!!

TT Media

வட இந்தியாவின் பிரபலமான பாவ் பாஜி!!!

N N

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

N N