Saturday, June 25, 2022
Homeஆன்மிகம்திருக்கேதீச்சர மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடக்கில் சிறப்பு பேருந்து சேவை

திருக்கேதீச்சர மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடக்கில் சிறப்பு பேருந்து சேவை

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கேதீச்சர ஆலயத்தில் எதிர்வரும் 03-07-2022 தொடக்கம் 06-07-2022 வரை நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகப் பெருவிழாவின் எண்ணெய்க் காப்பு, கும்பாபிஷேகத்திற்கு அடியவர்களை அழைத்துச் செல்லும் வகையில் தனியார் பேருந்து சேவை நிறுவனமொன்று வடமாகாணத்தின் நான்கு மாவட்டங்களிருந்து போக்குவரத்துச் சேவையை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங்களிலிருந்து திருக்கேதீச்சரம் நோக்கிய குளிரூட்டப்பட்ட பேருந்து சேவைக்கு அடியவர்கள் ஆசனங்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சிறப்புப் பேருந்து சேவையைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 0775450343 மற்றும் 0775993451 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular