fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » தேசிய அடையாள அட்டை தரவுகளை இணையமூடாக உறுதிப்படுத்தும் விசேட திட்டம்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

தேசிய அடையாள அட்டை தரவுகளை இணையமூடாக உறுதிப்படுத்தும் விசேட திட்டம்

தேசிய அடையாள அட்டை தரவுகளை இணையமூடாக உறுதிப்படுத்தும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு குறித்த செயற்திட்டம் பயனுள்ளதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் இணக்கப்பாட்டுடன் மாத்திரமே குறித்த சேவையினை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிநபர் ஒருவரின் தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு குறித்த நடவடிக்கை பயனுள்ளதாக அமையும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆஸ்திரேலியாவில் பரிசுகள் நிரப்பப்பட்ட பலூன்களால் தள்ளுமுள்ளு! பலர் படுகாயம்

World News

தற்கொலைக்கு முயற்சித்த யாழ். மாணவி உயிரிழப்பு!

SL News

20க்கு எதிராக யாழ்.இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்

SL News