இலங்கையில் முக்கிய நகர சாரதிகளுக்கு விசேட அறிவித்தல்

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக நடைபாதைகளில் தரிக்கப்படும் வாகங்களை இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், வாகனங்களை இவ்வாறு நடைபாதையில் தரித்து விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

இதனை மீறுபவர்களின் வாகனங்களை இழுத்துச் செல்லப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட வீதியோரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பொலிஸார் கருத்து வெளியிடுகையில், வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்துவது தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தின்படி குற்றமாகும் என போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, கொழும்பு நகரில் நாளாந்தம் பயணிக்கும் பாதசாரிகளின் வசதிக்காக நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்கள் இருந்தால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, உரிமையாளர்கள் இல்லாத பட்சத்தில் குறித்த வாகனம் அப்பகுதியில் உள்ள பொலிஸாரிடம் கொண்டு செல்லப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.