fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

இரத்த தட்டுப்பாடு: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசேட இரத்ததான முகாம்! (Video)

“விதையனைத்தும் விருட்சமே” இளைஞரணி 9 ஆவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள விசேட இரத்ததான முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை(18) காலை- 08.30 மணி முதல் மாலை-03.30 மணி வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் இடம்பெறவுள்ளது.

தற்போது யாழ்.குடாநாட்டு வைத்தியசாலைகளில் இரத்தத் தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியான செய்திகளைக் கருத்திற் கொண்டு மேற்படி இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விசேட இரத்ததான முகாம் தொடர்பில் “விதையனைத்தும் விருட்சமே” இளைஞரணியைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் எமது செய்திச் சேவைக்கு விசேடமாக கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போதைய காலகட்டத்தில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இரத்தத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாகப் பத்திரிகைகள் வாயிலாகவும், வலைத்தளங்கள் வாயிலாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தற்போது நாட்டில் நிலவும் கொவிட்-19 அசாதாரண சூழல் காரணமாக மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதனால், நடமாடும் இரத்ததான முகாம்களை ஒழுங்கமைத்து நடாத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், யாழ். இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்கு அதிக தட்டுப்பாடான நிலையேற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு விதையனைத்தும் விருட்சமே இளைஞரணியினராகிய நாம் நாளை ஞாயிற்றுக்கிழமை(18) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் விசேட இரத்ததான முகாம் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம்.

எனவே, இளைஞர்கள் மற்றும் குருதிக் கொடை ஆர்வலர்கள் தாமாக முன்வந்து இந்த விசேட இரத்ததான முகாமில் கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென “விதையனைத்தும் விருட்சமே” இளைஞரணியினர் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை, மேற்படி விசேட இரத்ததான முகாம் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 0773241755 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்துத் தமது வரவினை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ. ரவிசாந்}

Related posts

அரசாங்க அறிவுறுத்தல்களுக்கு அமையவே யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும்: அரசாங்க அதிபர் அறிவிப்பு (Photo)

TamilTwin

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 1937 பேருக்கு வழக்கு

World News

தவிசாளருக்கே இந்த நிலைமையென்றால்?: ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர் கடும் காட்டம்!! (Video)

TamilTwin