fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

பளிச் முகத்துக்கு சில டிப்ஸ்கள்

கோடை வெயிலினால் முகச் சருமம் அதிகளவு பாதிக்கப்படும். இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்காகப் பயன்படுத்தும் சன்ஸ்க்ரீன், லோஷன் போன்ற காஸ்மெட்டிக் விஷயங்கள்  சில நேரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே, இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களால், வீட்டிலேயே எளிய முறையில் முகத்தை பளிச்சிட செய்ய முடியும்.

      சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பொருள். மேலும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.

     வேகவைத்த உருளைக் கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றின் கலவையை முகத்தில் பூசிக்கொண்டால், பளிச்சென இருக்கும். 4 பாதாம்பருப்பு அரைத்த விழுதுடன், தேன் மற்றும் பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து பூசுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். இது, முகத்துக்கு புரோட்டின் தன்மையை அளித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.

Related posts

அசுர வேக தலைமுடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மாஸ்க்!!

N N

கோடை கால வியர்க் குரு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்தால் போதும் சரி ஆகிடும்!!

N N

பார்லர் ஸ்டைல் ஹேர் மாஸ்க் செய்யலாம் வாங்க!!

N N