fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

இரு தினங்களும் மூடப்படும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் சில பிரிவுகள்

எதிர்வரும் 05 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் செயற்பாடுகளுக்காக கொழும்பு 05, எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்குள், (ஈ) கொழும்பு கிழக்கு தேர்தல் பிரிவிற்குரிய 06 மற்றும் 07 இலக்கங்களைக் கொண்ட வாக்கு நிலையங்கள் தாபிக்கப்பட வேண்டும் என வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 1981ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின்123, (1) இன் அடிப்படையில், இந்த வாக்கு நிலையத்தை இடையூறுகளின்றி நடாத்திச் செல்வதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் வேண்டும்.

அதனடிப்படையில், தேர்தல்கள் வாக்கெடுப்பு செயற்பாடுகளின் பொருட்டு மேற்கூறப்பட்ட வாக்களிப்பு நிலையத்தை இடையூறுகளின்றி நடாத்திச் செல்வதற்கு, வாக்களிப்பு திகதிக்கு முந்திய தினம் மற்றும் வாக்களிப்பு தினம், அதாவது, ஆகஸ்ட் 04 மற்றும் 05 ஆகிய இரு தினங்களில் நாரஹேன்பிட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களமானது, பொதுவான அலுவலகக் கடமைகளுக்காக திறக்கப்படாது என்பதை, சேவை பெறுநர்களுக்கு அறியத்தருவதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை: நிறுத்தப்பட்ட விசா

World News

தமிழர்களின் பிரச்சினை தீர வேண்டுமென்பதில் கூட்டமைப்புக்கு அக்கறையே இல்லை: முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கடும் சாடல் (Video)

TamilTwin

வடக்கு மாகாணப் புதிய ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய யாழ். மாநகர முதல்வர் (Photos)

TamilTwin