fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய படம் – கீ

ஆசை ஆசையாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜீவா. அதன் பிறகு பல படங்களை நடித்துள்ளார். தற்சமயம் காலீஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிற கீ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கூறியுள்ளார்.

     குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் நாடோடிகள், ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களைத் தயாரித்து இருக்கிறது. அதை தொடர்ந்து நிறுவனத்தின் 10- வது தயாரிப்பாக கீ படம் உருவாகி உள்ளது.  இயக்குநர் காலீஸ் இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஜீவாக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இதில் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும்  பார்க்க வேண்டிய படம் – கீ

     இந்தப் படத்தை செல்போனை மையமாக வைத்து உருவாக்கி உள்ளார்கள். தற்சமயம் உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் ஏற்படும் பாதிப்பை இந்த கீ படம் உணர்த்துக்கிறது. 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் பின்னால் நடப்பது என்ன என்பதை படத்தில் இயக்குநர் காலீஸ் கூறியுள்ளார்.

Related posts

பிகில் படத்தின் 3 வது பாடல் வெளியீடு

N N

படு கவர்ச்சியான போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை, வைரலாகும் போட்டோக்கள்

TamilTwin India

காஐல் அகர்வால் படத்திற்கு சென்சாரில் கட்

N N