fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

சிறுதானிய பாசிப்பருப்பு இடியாப்பம்

பொதுவாகவே பயிறு வகைகள் நிறைய சத்துக்களை கொண்டவை. இதில் சிறுதானிய பாசிப்பருப்பு உடலில் அதிக சத்துக்களை கொடுப்பவை; இதில் இடியாப்பம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

சிறுதானிய பாசிப்பருப்பு இடியாப்பம்

சிறுதானிய பாசிப்பருப்பு இடியாப்பம் - Millets Dhal Idiyappam

சிறுதானிய பாசிப்பருப்பு இடியாப்பம் சிறுதானிய பாசிப்பருப்பு இடியாப்பம் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 50 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பதப்படுத்திய சிறுதானிய மாவு (சாமை, குதிரைவாலி) - தலா 1 கப்.
  • பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
  • வறுத்து அரைக்க:
  • கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, பொட்டுக் கடலை, துவரம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய் - 4-5,
  • கட்டி பெருங்காயம் - சிறிது,
  • பாதாம், முந்திரி - தலா 6.
  • தாளிக்க :
  • கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிது,
  • நெய், உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
  • மஞ்சள் தூள் - சிறிது.

Instructions

பாசிப்பருப்பை வேக வைக்கவும். வறுத்து அரைக்க உள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். சாமை, குதிரைவாலி மாவை லேசாக வறுத்து, 1½ கப் வெந்நீர், உப்பு சேர்த்து கிளறி இட்லி சட்டியில் இடியாப்பமாக பிழிந்து வேக வைத்துக் கொள்ளவும். தாளிக்க வைத்திருக்கும் பொருட்களை தாளித்து, மஞ்சள் தூள், உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து இடியாப்பத்தை உதிர்த்து போட்டு நன்கு கலந்து, வறுத்து அரைத்த பொடிகளை தூவி கலந்து, சூடாக சிறிது நெய் விட்டு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

 

Related posts

வெள்ளரிக்காய் மோர் ஜூஸ்

N N

சுவையான இறால் பிரியாணி செய்யலாம் வாங்க!!

TT Media

சுவையான பப்பாளி அல்வா செய்யலாம் வாங்க!!

TT Media