உயர்தரப் பரீட்சையின் பின்னர் பாடசாலையினை விட்டு வெளியேறியவர்களுக்கும், பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களிற்கும் திறன்களை விருத்தி செய்யும் முகமாக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய திறன் மேம்பாட்டு மையம் இன்று வியாழக்கிழமை(07.07.2022) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் விருந்தினராகக் கலந்து கொண்டு மேற்படி திறன் மேம்பாட்டு மையத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இதேவேளை, மேற்படி திறன் விருத்தி மையத்திற்கான நிதி உதவியினைக் கல்லூரியின் பழைய மாணவர்களான சி.இ.விக்னேஸ்வரன், மு.ந.அசோகன் ஆகியோர் வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)