Thursday, December 1, 2022
Homeஆன்மிகம்மக்களின் நலன் வேண்டி திருக்கோணேஸ்வரருக்கு மூன்று தினங்களுக்கு சிவமஹா யாகம்

மக்களின் நலன் வேண்டி திருக்கோணேஸ்வரருக்கு மூன்று தினங்களுக்கு சிவமஹா யாகம்

இலங்கைத் திருநாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலன் வேண்டியும், தற்காலத்தில் இடம்பெறும் ஆலயம் சார்ந்த இடர்பாடுகள் நீங்க வேண்டியும் நாயன்மார்களால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரப் பெருமான் ஆலயத்தில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு சிவமஹா யாகம் இடம்பெற உள்ளது.

எதிர்வரும்-24 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-7 மணியளவில் பிள்ளையார் யாகத்துடன் சிவ மஹா யாகம் ஆரம்பமாகும். அன்றைய தினமும், மறுநாளான 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் காலை-7 மணி முதல் பிற்பகல்-2.30 மணி வரை சிவமஹா யாகம் இடம்பெறும்.

யாகத்தின் மூன்றாவது நாள் 26 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை-5 மணியளவில் கோணைநாதருக்கான யாகம் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து விசேட ஹோமம் மற்றும் அபிஷேகம், பூசைகள் நடைபெறும்.

அன்றையதினம் மாலை-3.30 மணியளவில் மாதுமை உடனுறை கோணேசப் பெருமானுக்கு விசேட அலங்கார பூசைகள் இடம்பெற்று வேத பாராயணங்கள், மங்கள மேள நாதஸ்வர இசை மேளக் கச்சேரிகள், நடன புஸ்பாஞ்சலிகள் என்பன இடம்பெற்று கோணேசப் பெருமான் உள்வீதி, வெளி வீதி உலா வந்து சிவமஹா யாகம் இனிதே நிறைவுபெறும்.

சிவ மஹா யாகத்தின் பிரசாதமாக ருத்திராட்சம் வழங்கப்படும்.

இதேவேளை, சிவ மஹா யாகத்திற்கான அபிஷேகப் பொருட்கள், சமித்துப் பொருட்கள், மாலைகள், வில்வம் இலை, பால், இளநீர் மற்றும் அன்னதானத்திற்கான பொருட்கள், ஏனைய அபிஷேகம் சார்ந்த பொருட்களைத் தர விரும்பியவர்கள் 20.11.2022 இற்கு முன்னர் ஆலயத்தில் வழங்கி எம்பெருமானின் திருவருட் கடாட்சத்தைப் பெற்று உய்யுமாறு மேற்படி ஆலயப் பரிபாலன சபையினர் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular