நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளிவரப்போகும் திரைப்படம் மிஸ்டர். லோக்கல். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து இருக்கிறார். இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இவர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப் பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் பட இயக்குநர் பாண்டியராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். கடைக்குட்டி சிங்கம் பட வெற்றியினைத் தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருக்கிறார். சிவகார்த்திகேயனை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது பாண்டியராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மெரினா படத்தின் மூலம் பாண்டியராஜ் தான் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தி வைத்தார். இதனை அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இவர்களுடைய கூட்டணி நல்ல வரவேற்ப்பினைப் பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைய உள்ளனர்.