பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தின் அறிவிப்பானது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் சிவாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவான மிஸ்டர். லோக்கல் படமானது வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. . அடுத்தப்படியாக ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் தான் துவங்கியது. இந்த நிலையில், சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது உள்ளது. ஏப்ரல் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. . சிவகார்த்திகேயனுக்கு
ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான கனா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது சொல்லப்படுகிறது.