இசை அமைப்பாளர் மற்றும் பாடகராகவும் இருந்த ஜி.வி.பிரகாஷ், தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது வெளியாக உள்ள வாட்ச்மேன் படத்தின் டிரைலரை பார்த்த சிவகார்த்திகேயன் தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சர்வம் தாள மயம். அதற்கு பின் பெர்சண்ட் காதல், குப்பத்து ராஜா, ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி, வாட்ச்மேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்நிலையில் விஜய் இயக்கத்தில் உருவான வாட்ஸ்மேன் படம் ஏப்ரல் 12- ம் தேதி வெளி வர உள்ளது.
இந்த படத்தை பற்றி தமிழகத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வாட்ச்மேன் படத்தின் டிரைலரை பார்த்து தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வலைத்தள பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது.
வாட்ச்மேன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். பின்பு முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ் அருண், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.