சிவகார்த்திகேயன் சினிமாவில் எந்த விதமான பின்னணியும் இல்லாமல் டிவியில் நுழைந்து தன் திறமையால் வளர்ந்து வெற்றி பெற்று சினிமாவிற்கு வந்து வெற்றிகரமான நாயகனாக வலம் வருகிறார். அவருடைய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அவரைத் தேடி புதுப்பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

பல வெற்றிப் படங்களை தொடர்ந்து தற்போது ரவிக்குமார் இயக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கடுத்து கேஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு லைக்கா புரொடஷன்ஸ் தயாரிக்க, விக்கேஷ் சிவன் இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறார்.
ஒரே சமயத்தில் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்கிறார். அதுவும் இரண்டு பெரிய நிறுவனங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆகியிருப்பது திரையுலகத்தில் உள்ள சிலருக்குப் பொறாமையை வரவழைத்துள்ளது.