fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம்

தமிழ் சினிமா திரை உலகில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் 3 படத்தில் தனுஷ் நண்பனாக சினிமாவில் அறிமுகமானவர். அதற்கு பிறகு பல படங்களை நடித்துள்ளார். தற்சமயம் மிஸ்டர் லோக்கல் திரைப் படத்தில் நடித்துள்ளார், இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்க உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எஸ் கே.

சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம்

     தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற படம் தயராகி உள்ளது. இந்த படம் ராஜேஷ் இயக்கத்தில் உருவானது. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் சீக்கிரமாக திரைக்கு வர இருக்கிறது. இதை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் எஸ் கே வினை நடிக்க ஒப்பந்தம் செய்து உள்ளனர்.

     இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் தயாராக உள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த படம் 2020 வதில்வெளியாகும் என்று கூறியுள்ளனர் படக்குழுவினர்.

Related posts

40 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை புறப்பட்டார் சிம்பு!!

N N

‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்..!

TamilTwin India

”கர்ணன்” படத்தின் புகைப்படங்களை வெளியிட்ட தனுஷ்

TamilTwin India