fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சிவகார்த்திகேயனின் 15 – வது படத்திற்கு ஹீரோ என தலைப்பு

                நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் திரைப்படம் வெளிவர இருக்கிறது.  இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.  மிஸ்டர். லோக்கல் படத்தினை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படம் ஒன்றில் நடித்து வருகிறார் எஸ் கே.  இந்நிலையில் இயக்குநர்   பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 15 – வது படத்திற்கு இன்று பூஜை நடைபெறுகிறது.  இப்படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைத்து உள்ளனர்.  இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடிகர் அர்ஜூன் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.  இவர்களுடன் கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் 15 - வது படத்திற்கு ஹீரோ என தலைப்பு

      ஹீரோ திரைப்படம் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ளது.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.  ஹீரோ படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.  24 ஏ. எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர். டி. ராஜாவும், கே. ஜி. ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷும் இணைந்து ஹீரோ படத்தினை தயாரிக்கின்றனர்.

Related posts

காப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு

N N

போதையில் போலீசாரை தாக்கிய கவர்ச்சி நடிகையின் சகோதரர் கைது !

TamilTwin India

எனது சேவை என் குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டது, ராகவா லாரன்ஸ் பெரும்மூச்சு !

TamilTwin India