சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்தின் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சிவா. இவரின் விஸ்வாசம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா அடுத்தப் படத்திற்கான களத்தில் இறங்கிவிட்டதாக தகவல் வந்தது.
தல யின் வெற்றி இயக்குனர் சிவாவின் அடுத்த படத்தில் யார் ஹீரோ என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் சிவா விஜய்யிடம் கதை சொல்லியதாகவும், அதனால் அடுத்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. சிவா இயக்க பெயரிடப்படாத விஜய் 64 ன் படப்பிடிப்புகள் ஆகஸ்டு மாதத்தில் தொடங்கவிருப்பதாக உறுதியான நிலையில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவா-சூர்யா இணையும் படம் சூர்யாவின் 38 வது படமாக இருக்கும். இயக்குனர் செல்வராகவனின் என்.ஜி.கே படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
காப்பான் படப்பிடிப்பு முடிந்ததும் இறுதிச்சுற்று இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதற்கு அடுத்து தான் சிவா இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. இருந்தபோதிலும் சூர்யா 38 படத்தை இயக்கப்போவது யார் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.