fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழ். கல்வி வலய அதிபருக்கு கொரோனா!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

யாழ். கல்வி வலய அதிபருக்கு கொரோனா!

யாழ். கல்வி வலயத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை(22) உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இவர் கடந்த புதன்கிழமை(14) யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் இடம்பெற்றஅதிபர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இதில் 50 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இதுதவிரக் குறித்த அதிபர் தான் கடமையாற்றும் பாடசாலையில் வகுப்புக்களை நடாத்தியுள்ளதுடன் பெற்றோர் கலந்துரையாடலொன்றையும் நடாத்தியுள்ளார். அத்துடன் உரும்பிராயில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டுவிழா ஒன்றிலும் அவர் கலந்து கொண்டிருந்தார்.

இவருடன் தொடர்பிலிருந்த அல்லது இவருடன் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவரது வீட்டாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவருடன் திணைக்களத்தில் கூட்டத்தில் பங்குபற்றிய அதிபர்கள், கல்வி அதிகாரிகள் இதுவரை தனிமைப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, இந்த மாதம்- 9 ஆம் தேதி குறித்த பாடசாலை அதிபர் முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(எஸ்.ரவி)

Related posts

ஒரே நேரத்தில் 3 சூரியன்! ஆச்சரியத்தில் உறைந்த நாட்டு மக்கள் (video)

World News

மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்!

TamilTwin

பாடசாலை விடுமுறைக் காலத்தை இரு வாரங்களுக்கு நீடிக்கத் தீர்மானம்!

N N