Thursday, December 1, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்சிங்கப்பூர் டூ அண்டார்டிகா.. 4 கண்டங்கள் தாண்டி உணவு டெலிவரி செய்த தமிழகப் பெண்!

சிங்கப்பூர் டூ அண்டார்டிகா.. 4 கண்டங்கள் தாண்டி உணவு டெலிவரி செய்த தமிழகப் பெண்!

சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகா வரை 4 கண்டங்களைத் தாண்டிச் சென்று உணவு டெலிவரி செய்து தமிழகப் பெண் ஒருவர் அசத்தியுள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையைச் சார்ந்த இளம்பெண் மானசா கோபால், இவர் சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

அண்டார்டிகாவில் வசிக்கும் நபர் ஒருவர் ஒரு உணவினை ஆர்டர் செய்துள்ளார்.

உணவினை மானசா ஜெர்மனி, அர்ஜென்டினா என பல நாடுகளைத் தாண்டி பயணம் செய்துள்ளார்.

மொத்தம் 36000 கிமீ பயணம் செய்த மானசா இறுதியில் உணவினை அண்டார்டிகாவில் வசிக்கும் நபரிடம் டெலிவரி செய்துள்ளார்.

இவரின் பயணம் சிங்கப்பூரில் துவங்கி அண்டார்டிகாவில் முடிவடைவது போன்ற வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பார்வையாளர்கள் பலரும் என்னது 4 கண்டங்கள் தாண்டி, 36000 கிமீ பயணம் செய்து உணவு டெலிவரி செய்துள்ளாரா? என்று ஷாக்காகிப் போய் உள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular