fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

முகம் பளபளக்க எளிய குறிப்புகள்

கடலைமாவுடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சிறிதளவு பால் சேர்த்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் முகத்தை கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும். உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வந்தால் சூரியக் கதிர்களால் ஏற்படும் நிறம் மாறும். பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தில் வைத்தால் கருவளையம் மாறும்.

முகம் பளபளக்க எளிய குறிப்புகள்

    பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, கரும்புள்ளி மறையும். மோரை முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளக்கும். குளிக்கும்போது முகத்திற்கு சோப்பு பயன்படுத்தாமல் கடலைமாவு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதாக உதிர்ந்து புத்துணர்வு பெறும். காய்ச்சாத பாலை 1 ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள், காய்ந்ததும் கழுவவும். தினமும் தொடர்ந்து செய்தால் முகத்திற்கு நல்ல பொழிவு கிடைக்கும். புதினா முகத்திற்கு  புத்துணர்ச்சியூட்டும். மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

Related posts

முகப் பொலிவிற்கான முட்டை ஃபேஸ்பேக்!!!

N N

கூந்தலுக்கான வீட்டு வைத்தியம்

N N

கருமை நிறம் மாறி சிவப்பழகு பெற!!

N N