இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த சிம்பு முதல் முறையாக ஒரு பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன் இப்படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பினை பெற்றது. இவர் ஹன்சிகா நடிக்க இருக்கும் மகா என்ற படத்தில் கௌரவ வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சிம்பு லண்டன் சென்று தன்னுடைய உடலினை பழைய நிலைக்கு கொண்டு வருவருவதற்கு சிறப்பு பயிற்சிகளை மேற்க்கொண்டு வருகிறார்.

மகா படத்தினை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இதனை அடுத்து ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். கன்னடத்தில் வெற்றிப் பெற்ற மப்டி என்ற படத்தின் ரீமேக் ஆகும் இப்படம். இப்படத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடித்து இருந்தனர். தமிழில் இப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்க இருக்கிறார். அவருக்கு வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளார். சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். சிம்பு வில்லனாக நடிக்கும் முதல் படம் இதுவே ஆகும்.