fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஷில்பா ஷெட்டி குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர்

தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்திலும் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் குஷி படத்தில் கூட சிறப்பான தோற்றத்தில் வந்தார். ஷில்பா ஷெட்டி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல்மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஷில்பா ஷெட்டி குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர்

2007-ம் ஆண்டு வெளிநாட்டில் பிக்பிரதர் டி.வி. நடைபெற்ற நிகழ்ச்சியில் பல போட்டியாளர்களால் இனவெறிக்கு ஆளாகி பரபரப்பானார் ஷில்பா ஷெட்டி . ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபரான ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள்து. தற்போது குடும்ப தகராறினால் ராஜ்குந்தராவை ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்ய போவதாக செய்தி பரவி உள்ளது. இந்த செய்தி இந்தி பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னணி நடிகர், நடிகைகள் ஒருவரையொருவர் தொடர்புகொண்டு இந்த செய்தியானது உண்மையா  என்று விசாரிக்கிறார்கள்.

ஷில்பா ஷெட்டியையும் தொடர்புகொண்டு பேசினார்கள். அதன்பிறகு தான் இந்த வதந்தியை யார் பரப்பியது என தெரிய வந்தது. டி. வி நிகழ்ச்சியின்போது ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமல் அனுராக் பாசு அவரது செல்போனை எடுத்து அதில் தான் கணவருடன் சண்டை போட்டு விட்டதாகவும்  அதனால் அவரை விவாகரத்து செய்வதாகவும் அனுராக் பாசு பதிவு செய்து ஷில்பா ஷெட்டியின் அம்மாவுக்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்ததும்  ஷில்பா ஷெட்டியின் அம்மா போன் செய்து பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Related posts

மும்பை அழகிகளுடன் நடனமாடிய ஜெய்

N N

ரஞ்சித்தின் சல்பேட்டா ஆர்யாவுக்கு ஜோடியாகிறார் துஷாரா !

TamilTwin India

நடுரோட்டில் கஞ்சா வாங்கிய நடிகை, பரபரப்பு புகார்..!!

TamilTwin India