fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அழகான நடிகையை தங்கை என்று அறிவித்த பிரபல நடிகர்

சூர்யகாந்தம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை நிஹாரிகாவை, ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா அவரை என் தங்கையாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

                அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அடுத்ததாக இவர் தமிழில் ‘நோட்டா’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தெலுங்கு சினிமாவில் இவரை சென்சேஷனல் ஹீரோ என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அழகான நடிகையை தங்கை என்று அறிவித்த பிரபல நடிகர்

               இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா கொனிடெலாவும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா அவரை என் தங்கையாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். சமீபத்தில் இருவரும் ஜோடியாக நடித்த சூர்யகாந்தம் படம் வெளியானது. இந்நிலையில் இந்தப் பட விழாவில் கலந்து கொண்டு படத்தை பார்த்து வெற்றி பெற செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு அவர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜய்.

Related posts

தளபதி 65 படத்தின் வாய்ப்பை இழந்த இயக்குனர்

TamilTwin India

விவேக்கை வைத்து வீடியோ மீம்ஸ், ட்விட்டரில் பதிவிட்ட விவேக் !

TamilTwin India

படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா நம்பீசன்

N N