Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்கந்தர்மடத்தில் நாளை ஞானப்பிரகாசத்தின் 32 ஆவது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வு

கந்தர்மடத்தில் நாளை ஞானப்பிரகாசத்தின் 32 ஆவது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வு

யாழ். மாவட்டச் சமூக அபிவிருத்தி மன்ற ஸ்தாபகரும், கூட்டுறவுத் துறையின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழும் அமரர்- சண்முகம் ஞானப்பிரகாசத்தின் 32 ஆவது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வு நாளை சனிக்கிழமை(26.11.2022) முற்பகல்-10 மணியளவில் கந்தர்மடத்தில் அமைந்துள்ள யாழ்.மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் மேற்படி சங்கத்தின் தலைவி திருமதி.சி.சுரபி தலைமையில் நடைபெறும்.

மேற்படி நிகழ்வில் யாழ்.மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க உபதலைவர் க.மகாதேவன் அமரர்.சண்முகம் ஞானப்பிரகாசம் ஞாபகார்த்த நினைவுப் பேருரையை நிகழ்த்துவார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular