fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

வடிவேலு மேல் அதிருப்தியான ஷங்கர்

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் இருக்கும் போது வடிவேலு புதிய படத்தில் நடிக்கிறார், அதனால் கோபமடைந்த இயக்குனர் புதிய படத்திற்கு தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு நடித்து 2006-ல் திரைக்கு வந்து வசூல் குவித்த இம்சை அரசன் 23-ம் புலிகேலி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். அந்த படத்திலும் வடிவேலுவையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்று பெயர் வைத்து அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பையும் துவக்கினர்.

இதில் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தவேளையில், ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்ளிட்ட சில பிரச்சினைகளில் இயக்குனருக்கும் வடிவேலுக்கும் தகராறு ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினார். இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.

வடிவேலு மேல் அதிருப்தியான ஷங்கர்

படம் நின்றுபோனதால் தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஷங்கர் கூறினார். இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் வடிவேலு ‘பேய் மாமா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஷங்கர் மிக அதிருப்தியானார்.

தற்போது இந்த படத்துக்கும் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருப்பதாகவும், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை முடிக்காமல் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று வற்புறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

இந்தித் திணிப்பு குறித்து பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின்!!!

N N

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய ரஜினி

TamilTwin India

வெறும் உள்ளாடையுடன் உச்சக்கட்ட கவர்ச்சி, நடிகை மது ஷாலினி நடத்திய போட்டோ ஷூட்!

TamilTwin India