fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ள இளம் இசை அமைப்பாளர்

      சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளர் என்ற அவதாரம் எடுத்து இருக்கிறார்.  இவர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் கனா.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு திரைப்படத்தினை இவர் தயாரிக்கிறார்.  பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு தயாரிப்பு எண் 2 என தற்காலிகமாக கூறப்பட்டு வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது.  இப்படத்தின் இசை அமைப்பாளர் யார் என்ற விவரம் சொல்லப்படாமலேயே இருந்தது.  தற்போது படக்குழுவினர் படத்தின் இசை அமைப்பாளர் யார் எனக் கூறி இருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ள இளம் இசை அமைப்பாளர்

      இப்படத்திற்கு இளம் இசை அமைப்பாளரான ஷபீர் என்பவர் இசை அமைத்து இருக்கிறார்.  இப்படத்தில் இசை அமைப்பது குறித்து ஷபீர் கூறியதாவது, துடிப்பான இளைஞர்கள் உள்ள குழுவில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது.  சிவகார்த்திகேயன் சார் குழுவில் பணியாற்றியது ஒரு பெரிய பொறுப்பினை வழங்கி உள்ளது என ஷபீர் கூறி இருக்கிறார்.  இப்படத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.  இப்படத்தினை கார்த்திக் வேணுகோபால் இயக்குகிறார்.

Related posts

ஹாலிவுட் நடிகையின் ரகசிய வாழ்க்கை, தலைமறைவாக சந்திக்கும் முன்னாள் கணவர்..!

TamilTwin India

வைரலாகும் லாஸ்லியாவின் அண்மை புகைப்படங்கள்

TamilTwin India

மாநாடு பிரபலங்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு ! வைரலாகும் புகைப்படங்கள்

TamilTwin India