fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உலகச் செய்திகள் செய்திகள்

800 குஞ்சுகளின் தந்தையாகி இனத்தையே கைப்பற்றிய ஆமை (Video)

இந்த ஆமையை செக்ஸ் சூப்பர்ஸ்டார் என மேற்குலக ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

ஈகுவடார் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது, கலபாகோஸ் தீவு. இது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது.

அங்கு, அழிந்து வரும் இனமான ‘செலோனாய்டிஸ் கூடன்சிஸ்‘ என்ற ராட்சத ஆமை இனத்தை பெருக்க சுற்றுச்சூழல் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக, அதே இனத்தில் 3 ஆண் ஆமைகளையும், 12 பெண் ஆமைகளையும் தேர்வு செய்தனர். அவற்றில் ஒரு ஆண் ஆமை, 40 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘டியாகோ‘ என்ற ஆமை ஆகும். அப்போதே அதன் வயது 60.

கலபாகோஸ் தீவில், 3 ஆண் ஆமைகளையும், 12 பெண் ஆமைகளையும் அடைத்து வைத்து இனப்பெருக்க நிகழ்வை அதிகாரிகள் நடத்தினர். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. தற்போது, அங்கு 2 ஆயிரம் ஆமைகள் நடமாடுகின்றன.

அவற்றில் 800 ஆமைகளுக்கு ‘டியாகோ‘ ஆமைதான் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தீவில் உள்ள 40 சதவீத ஆமைகள், டியாகோவின் பிள்ளைகள் ஆவர். இனப்பெருக்க நிகழ்வில், ‘டியாகோ‘ தீவிரமாக பங்கெடுத்து, தனது இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றி விட்டதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

தற்போது, டியாகோவுக்கு 100 வயது ஆகிறது. அதனால், அதற்கு ஓய்வு கொடுக்கும்வகையில், அதன் பிறப்பிடமான எஸ்பனோலா தீவில் உள்ள காட்டுக்கே அதை அனுப்பி விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வருகிற மார்ச் மாதம், ‘டியாகோ‘ அங்கு விடப்படுகிறது. இனிமேல், கலபாகோஸ் தீவில், ராட்சத ஆமைகள் இயல்பாகவே வளரக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக அதிகாரிகள் கூறினர்.

Related posts

யாழ். இளவாலையில் மறைந்த நண்பன் நினைவாக உயிர்காக்கும் பணியில் ஆருயிர் நண்பர்கள் (Videos, Photos)

TamilTwin

தனியார் ஊடகங்கள் மீது கடுப்பாகிய வடக்கு ஆளுனர்!! (Photo)

TamilTwin

யாழ். ஏழாலையில் விவசாய நிலத்தில் கொள்ளையிட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!! (Videos, Photos)

TamilTwin