fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சூர்யா படத்தில் பாடிய செந்தில் – ராஜலட்சுமி

                நடிகர் சூர்யா நடித்து ரிலீஸிற்கு தயாராக இருக்கும் படம் என்ஜிகே.  இப்படத்தினை இயக்குநர் செல்வராகவன் அவர்கள் இயக்கி இருக்கிறார்.  இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் பிரீத் சிங் இருவரும் நடித்து இருக்கின்றனர்.  தற்போது இவர் காப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  காப்பான் படத்தினை கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்குகிறார். 

சூர்யா படத்தில் பாடிய செந்தில் – ராஜலட்சுமி

      இப்படத்தினை அடுத்து நடிகர் சூர்யா இறுதி சுற்று பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.  இப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.  இப்படத்தினை சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கிறது.  இது நடிகர் சூர்யாவின் 38 – வது படம் ஆகும்.  இப்படம் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.  சாதாரண மக்களும் விமான போக்குவரத்து சேவையை உபயோகப்படுத்தும் பட்ஜெட் விமான சேவையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.  இப்படத்தில் ஒரு பாடலை செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் பாடி உள்ளனர்.

Related posts

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி பட நாயகி !

TamilTwin India

சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டு பிரபல நடிகர்கள்

N N

தல தோணி ஸ்டைலில் தனது ஓய்வை அறிவித்த பிக் பாஸ் கவின்..!!

TamilTwin India