Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்சப்பரத்தில் அன்னதானக் கந்தன் அலங்காரவேற் கந்தனாக அருளாட்சி(Photos)

சப்பரத்தில் அன்னதானக் கந்தன் அலங்காரவேற் கந்தனாக அருளாட்சி(Photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் சப்பரத் திருவிழா இன்று வியாழக்கிழமை (08.9.2022) இரவு வெகுசிறப்பாக நடைபெற்றது.

இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவின் 13 ஆம் நாள் மாலை உற்சவம் சப்பரத் திருவிழாவாக இடம்பெற்றது. இதன்போது அன்னதானக் கந்தன் சந்நிதி வேற்பெருமான் பல வர்ண சிறப்பான மலர் அலங்காரங்களுடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வலம் வந்த காட்சி அற்புதமானது.

இதேவேளை, சப்பரத் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டனர். அத்துடன் பல ஆண் அடியவர்கள் காவடிகள் எடுத்து வந்தும் தங்கள் நேர்த்திகளை நிறைவு செய்தனர்.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular